மே (01) நடைபெறும் அணிவகுப்பு மற்றும் மே தின பேரணிகளுக்காக நாடளாவிய ரீதியில் 9,000 இற்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 40 மே பேரணிகளும் கொழும்பு பிரதேசத்தில் 14 மே பேரணிகளும் நடத்தப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கொழும்புக்கு வரும் போக்குவரத்தை கையாள்வதற்கு சுமார் 1200 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், தீவு முழுவதும் 350 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், தேவைப்பட்டால் இராணுவம் வரவழைக்கப்படும் எனவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.