இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்திய தேர்தல் நடைமுறைகளை அறிந்து கொண்டு தேர்தல் கண்காணிப்பாளர்களாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பங்களிப்பதற்கு இந்த அழைப்பு வந்துள்ளது.
இந்தியாவின் பொதுத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் திகதி தொடங்கி ஜூன் 1ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
வெளிநாட்டு அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கு இந்திய தேர்தல் நடைமுறைகள் பற்றிய புரிதலை வழங்குவதற்காக இந்திய ஆளும் கட்சி எடுத்த முடிவின் அடிப்படையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வகையில் பத்து நாடுகளில் உள்ள பதினெட்டு பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.