web log free
May 28, 2026

பிரபல நடிகர் ஐதேகவில் இணைந்தார்

பிரபல நடிகர் கவிங்க பெரேரா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார்.

சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் தொழிற்சங்க சங்கத்தின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.

எவ்வாறாயினும், அடுத்த தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பதை கவிங்க பெரேரா இதுவரை குறிப்பிடவில்லை.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கயாஷான் நவநந்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் எதிர்வரும் தேர்தல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதும், கட்சி அமைப்பின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு, கட்சியின் புதிய உறுப்பினர்களுக்கு உறுப்புரிமை வழங்கும் நிகழ்வும் இங்கு இடம்பெற்றுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd