அஸ்வெசும மானியம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் (30) வரை நன்மைகளைப் பெறும் மக்களுக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.
முன்னர் அறிவிக்கப்பட்டபடி, பலன்களைப் பெறுவதற்கு உரிமையுள்ள ஒரு குழுவிற்குப் பலன்களை வழங்கும் காலம் ஜூன் (30) முடிவடைந்திருந்தது மற்றும் மற்றொரு குழுவிற்கு நன்மைகளை வழங்குவதற்கான காலம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் (31) அன்று முடிவடைய இருந்தது.
ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், நிவாரணப் பலன்களுக்கு உரித்துடைய சிலருக்கு எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜூன் (30) வரையிலும், மற்றுமொரு குழுவினருக்கு 2025 ஜூன் (30) வரையிலும் பலன்கள் வழங்கப்படும்.
அதன்படி, பாதிக்கப்படக்கூடிய குடும்பத்திற்கு மாதம் ரூ.5000, ஏழைக் குடும்பத்துக்கு ரூ.8500, மிகவும் ஏழ்மையான குடும்பத்துக்கு மாதம் ரூ.15000 ரூபா வழங்கப்படும்.