தென்மேற்கு பருவமழை காரணமாக வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்க கூடும் என கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலைமை காரணமாக, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படக் கூடும் என்பதால், மீள் அறிவித்தல் வரை கடற்றொழில் மற்றும் கடற்கரை நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.
மறு அறிவித்தல் வரை, நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களை, மழையுடன் கூடிய அனர்த்த நிலைமை ஏற்பட்டால், கூடிய விரைவில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கடற்றொழில் திணைக்களம் அறிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மையத்தின் தொலைபேசி எண் 117 ஊடாக உதவிகளைப் பெறலாம் .