குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று தமது கட்சிக்காரரிடம் 30 கோடி ரூபா கப்பம் கோரியுள்ளதாக வர்த்தகர் விரஞ்சித் தபுகலவுக்காக நீதிமன்றத்தில் ஆஜரான அவரது சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
7 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விரந்தித் தபுகலவின் சார்பில் ஆஜரான அவரது சட்டத்தரணி நீதிமன்றில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தற்போது இரகசிய பொலிஸ் சேவையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகள் குழுவொன்றே இவ்வாறு கப்பம் கோரியுள்ளதாகவும், இது தொடர்பில் நீதிமன்றில் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்குவதற்கும் அனுமதி கோரப்பட்டுள்ளதாக விரஞ்சித் தபுகலவின் சட்டத்தரணி தெரிவித்தார்.
முதலில் கப்பம் கோரிய 30 கோடி, பின்னர் 5 கோடியாகக் குறைக்கப்பட்டு, 2 கோடியை ரகசியப் போலீஸ் அதிகாரிகள் முற்பணமாகப் பெற்றதாக சட்டத்தரணி கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இது தொடர்பாக ரகசிய வாக்குமூலம் அளிக்க தனது கட்சிக்காரருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.
இரு தரப்பினரின் உண்மைகளையும் கருத்திற்கொண்ட நீதிமன்றம் விரஞ்சித் தபுகலவுக்கு பிணை வழங்கியதுடன், எதிர்வரும் ஜூலை மாதம் 24ஆம் திகதி வழக்கு விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.