ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்க நிலையத்தின் பொதுச் செயலாளரும் அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவருமான லெஸ்லி தேவேந்திராவுக்கு உபகாரம் செலுத்தும் விசேட வைபவம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்விற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அழைக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.
அவரது முன்கூட்டிய பாதுகாப்பு வாகனத் தொடரணியும் நிகழ்வுக்கு வந்திருந்ததுடன், ஸ்ரீலங்கா தேசியக் கட்சியின் பதில் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் லசந்த அழகியவன்ன ஆகியோரின் வருகையை அடுத்து, மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்புத் தொடரணி உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
அறுபது வருடங்களாக கட்சிக்காக உழைத்த தேவேந்திரவின் உபகார நிகழ்வில் மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.