கடந்த காலங்களில் சுமார் எட்டரை இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அது நான்கு இலட்சமாக குறைக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார்.
தற்போது நாளாந்தம் சுமார் 10,000 சாரதி அனுமதிப்பத்திரங்களை ஊழியர்கள் வழங்கி வருவதாகவும் தபால் மூலம் விநியோகிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் எதிர்வரும் ஜூலை மாதத்துடன் முழுமையாக முடிவுக்கு கொண்டுவரப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவிக்கின்றார்.