நாளை (03) பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.
நிலவும் சீரற்ற காலநிலையின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் நாளை நாட்டில் அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த அறிவித்தார்.
கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் மண்சரிவு அபாய வலயங்கள் மேலும் அதிகரித்துள்ளன.
இந்த எச்சரிக்கை நாளை காலை 7:00 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள 13 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மூன்றாம் கட்டம் அல்லது சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.