ஒரு குறிப்பிட்ட கிராமத்திற்கு ஆறு மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு ஆறு மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திடம் தண்ணீர் கேட்டாலும் மதுபானமே வழங்குவதாக கிராம பிக்குகள் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் குறிப்பிடுகையில், இது மிகவும் பழைமையான கிராமம் எனவும், அது பற்றி பேசுவதற்கு கூட வெட்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று (07) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.