web log free
April 21, 2025

மொட்டில் இருந்து யானைக்கு ஆதரவு வழங்குவோருக்கு வெட்டு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நேரடியாக ஆதரவாக நிற்கும் பொஹொட்டுவ பாராளுமன்ற உறுப்பினர்களை தமது கட்சி உறுப்பினர்களிடமிருந்து ஓரங்கட்டுவதற்கான நுட்பமான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க கட்சியின் குழுவொன்று நடவடிக்கை எடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி, பொஹொட்டுவவில் இந்த நாட்களில் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் தொகுதி மாநாடுகளுக்கு பொஹொட்டுவவைச் சேர்ந்த ரணிலுக்கு ஆதரவான உறுப்பினர்கள் அழைக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அநுராதபுரம் கலாவெவ தொகுதி மாநாட்டுடன் முதல் சம்பவம் ஆரம்பமானது எனவும், அதற்கு இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அழைக்கப்படவில்லை எனவும் மேற்கண்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

மாத்தளை பொஹொட்டுவவில் பலமாக இருந்த ஜனக பண்டார தென்னகோன் மற்றும் அவரது மகன் பிரமித பண்டார தென்னகோன் ஆகியோருக்கு அண்மையில் மாத்தளை இரத்தோட்ட தொகுதி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக பொஹொட்டுவ கட்சியில் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நேரடியாக உதவ தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd