ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றியதன் பின்னர், அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்படி தற்போதைய அமைச்சரவையில் சில புதிய முகங்கள் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சஜபா, பொஹொட்டுவே மற்றும் சுயேட்சைக் கட்சியைச் சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவையில் இணைய உள்ளனர்.
இதன்படி, ராஜித சேனாரத்னவுக்கு சுகாதார அமைச்சர் பதவி தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை அப்பதவியில் இருந்து நீக்கி சுசில் பிரேமஜயந்திற்கும் கல்வி அமைச்சர் பதவி எஸ்.பி.திஸாநாயக்கவிற்கும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சில புதிய இராஜாங்க அமைச்சுப் பதவிகளில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.