web log free
February 08, 2026

21 மொட்டு எம்பிக்களுக்கு அடித்துள்ள அதிஷ்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 21 உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தின் பலம் வாய்ந்த ஒருவரின் தலையீட்டினால் மாதாந்தம் தலா இரண்டு இலட்சம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதாக கட்சி வட்டாரத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த கொடுப்பனவுகள் வேறொரு கட்சியின் பலம் வாய்ந்த உறுப்பினர் ஒருவரின் தலையீட்டின் மூலம் வழங்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

கொடுப்பனவு பெறும் குழுவில் இரண்டு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளதாக தெரியவந்துள்ளது.

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவைப் பெறுவதற்காகவே இந்த கொடுப்பனவு வழங்கப்படுவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஒருவரிடம் வினவிய போது, தமக்கு அவ்வாறான தகவல் கிடைத்துள்ளதாகவும், அது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd