இன்னும் சில மாதங்களில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளதால், தேர்தலுக்கு தயாராகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தனது திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக அரசாங்க தகவல் பிரிவு அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
அதன்படி 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு திகதியை நிர்ணயித்தால் அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அரசாங்க தகவல் பிரிவு அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் கோரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.


