web log free
May 20, 2026

ஹிருணிகாவை சந்திக்கத் தயங்கும் சஜித் அணி!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிடம் பேசவும், நலம் விசாரிப்பதற்காகவும் சிறைச்சாலைக்குச் செல்வதை ஐக்கிய மக்கள் சக்தி தவிர்த்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் போது பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆசன அமைப்பாளர்களுடன்  ஹிருணிகா பிரேமச்சந்திர முரண்பட்டமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

ஹிருணிகா பிரேமச்சந்திர தனக்காக மக்கள் ஆதரிக்காதமை குறித்து மிகவும் கவலையடைவதாக மேற்கண்ட வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd