web log free
March 20, 2026

வசந்தவின் மனைவி ஆபத்தான நிலையில்

கிளப் வசந்தாவின் மனைவி துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து களுபோவில வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹோமாகம வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் பச்சை குத்தும் வியாபாரத்தின் உரிமையாளரின் சகோதரியின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக ஹோமாகம வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகர் கே. சுஜீவாவும் மற்ற நபரும் பல அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு மேலதிக சிகிச்சையில் உள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினர் உட்பட 10 பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd