web log free
September 08, 2024

அரசாங்கம் கூறியது போல சம்பள உயர்வு கிடைக்குமா?

தொழிற்சங்க பிரதிநிதிகள் குழுவொன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

அரச சேவையில் ஒன்றிணைந்த பணிப்புறக்கணிப்பில் கலந்து கொள்ளாத பணியாளர்களுக்கு விசேட சம்பள அதிகரிப்பை வழங்கி அரச சேவையில் பிளவுகளை ஏற்படுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அரச சேவையின் நிறைவேற்று அதிகாரிகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள 25,000 ரூபா கொடுப்பனவை தமக்கு வழங்குமாறு கோரி அரச ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத அரச ஊழியர்களுக்கு விசேட சம்பள அதிகரிப்பை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை, சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரச சேவையின் அனைத்து தொழிற்சங்கங்களுடன் இணைந்து விசேட கலந்துரையாடலும் இடம்பெற்றது.