கிளப் வசந்த் கொலைச் சம்பவம் தொடர்பாக துபாய் மற்றும் பிரான்ஸில் இருந்து துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலைத் திட்டமிட்டதாக அறியப்படும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நான்கு சக்திவாய்ந்த பாதாள உலகக் குற்றவாளிகளின் 4 கையடக்கத் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலை நடத்த பயன்படுத்தப்பட்ட கையடக்க தொலைபேசி இலக்கங்கள் 4 தற்போது பகுப்பாய்வு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் கைத்தொலைபேசிகளை பரிசோதித்த போது இந்த தொலைபேசி இலக்கங்களை அடையாளம் காண முடிந்தது.
துபாய் மற்றும் பிரான்ஸில் உள்ள தொலைபேசி இலக்கங்களில் இருந்து சந்தேகநபர்கள் அழைக்கப்பட்டதாகவும், தாக்குதலுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பான தொலைபேசி இலக்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எதிர்கால விசாரணைகளுக்கு சர்வதேச பொலிஸாரின் உதவியைப் பெற வேண்டியுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
பிரான்ஸ் தொலைபேசி எண்ணிலிருந்து துபாயிலிருந்து அழைப்புகளை மேற்கொண்டு கொலையை திட்டமிட்ட குற்றவாளி பற்றிய தகவல் தற்போது வெளியாகி வருவதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
தாக்குதலை நடத்திய இரண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களும் இன்னும் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவில்லை என நம்பப்படுவதாகவும், அவர்களைக் கண்டுபிடித்து அவர்களை அடையாளம் காண்பதற்கு பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இரவு பகலாக உழைத்து வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.