முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான மனுவை விசாரிக்க 7 நீதியரசர்களை கொண்ட குழாமொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர், உச்ச நீதிமன்றத்திடம் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைய பிரமர் நீதியரசர் 7 பேரை கொண்ட நீதியரசர்கள் குழாமினை நியமித்துள்ளார்.
ஐ.எஸ் தாக்குதல்கள் தொடர்பிலான முன் எச்சரிக்கைகளை கிடைத்தும் அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் தவறிழைத்துள்ளதாக தெரிவித்து இருவருக்கும் எதிராக தாக்கல்செய்யப்பட்டுள்ள 7 அடிப்படை உரிமை மீறல் மனுகளை இன்றைய தினம் உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.