எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்க கம்பஹா தொகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன ஒன்றிணைந்து வேலைத்திட்டத்தை தயாரித்துள்ளன.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த கூட்டு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டது.
ஆட்சேர்ப்பு, வாக்குச் சாவடி முகவர்கள் நியமனம், சிறு பொதுக் கூட்டங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேர்தல் நடவடிக்கைகளை கூட்டாக முன்னெடுப்பதற்காக அனைத்துக் கட்சிகளையும் கொண்ட கூட்டு வழிநடத்தல் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.