அடுத்த ஜனாதிபதி யார் என்பதை மக்கள் தீர்மானிக்கும் வகையில் பொதுவான கொள்கையொன்றை அறிவிப்பதற்காக பிரதான அரசியல் தலைவர்களை ஒன்று திரட்டுவதற்காக சங்க ஒன்றியத்துக்கு அழைப்பு விடுக்க பொதுபல சேனா அமைப்பு தீர்மானித்துள்ளது.
ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களுக்குள் அரசியல் செல்வாக்கு இல்லாத 5000 பிக்குகள் சங்க மாநாட்டை நடத்தவுள்ளதாக தெரிவித்தார்.
சுதந்திரம் அடைந்த 76 ஆண்டுகளில் பல்வேறு தலைவர்கள் தங்கள் கொள்கைகளுக்கு உட்பட்டு நாட்டை ஆண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சமகி ஜன பலவேகய தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய ஜன பலவேகய தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகிய ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் தமது கொள்கைகளை மகாசங்கரத்தினத்திடம் முன்வைக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
“அரசியலமைப்பு திருத்தங்கள் அல்லது நாடாளுமன்ற மசோதாக்கள் பற்றி மக்கள் கேட்க விரும்பவில்லை. செலவினங்களை நிர்வகித்தல், பிள்ளைகளைப் படிக்க வைப்பது போன்ற அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அவர்கள் விரும்புகிறார்கள்,” என்றார்.
எனவே, புதிய ஜனாதிபதி தொடர்பில் மக்கள் கருத்தறியும் தீர்மானத்தை மேற்கொள்ளும் வகையில் பொதுவான கொள்கையொன்றை அறிவிப்பதற்கு முக்கிய அரசியல் தலைவர்களை ஒரே மேடையில் கொண்டுவர பொதுபல சேனா அமைப்பு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.