web log free
February 12, 2026

முதல் நாளிலேயே நாமலுக்கு எதிர்ப்பு

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்  நாமல் ராஜபக்ஷ  அனுராதபுரம் அட்டமஸ்தானத்திற்கு தரிசனம் செய்து தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

நாமல் ராஜபக்ஷ அநுராதபுரத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, உள்ளூர் அரசியல்வாதி ஒருவரின் அழைப்பின் பேரில் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த மக்கள் குழுவொன்று எதிர்ப்புத் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் தம்புள்ளை மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் இவ்வாறான கூட்டங்கள் அல்லது வரவேற்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், அந்த இடத்தில் கூட்டத்தை கூட்ட முடியாததால், நாமல் ராஜபக்ஷ, எப்போதும் கூட்டம் இருக்கும் பொருளாதார மையத்திற்கு கூட்டத்தை கொண்டு வர முயற்சித்ததாகவும் ஒருவர் கூறினார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd