சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை அல்லது Pafferal அமைப்பு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பங்கேற்புடன் நேருக்கு நேர் விவாதமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி விவாதத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.
6 பிரதான வேட்பாளர்கள் விவாதத்தில் பங்கேற்க உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாமல் ராஜபக்ஷ, சர்வ ஜன பௌலவின் திலித் ஜயவீர மற்றும் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடும் அரிேந்திரன் ஆகியோர் இந்த விவாதத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் 07 பிரதான இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் கிட்டத்தட்ட 200 சமூக ஊடக பக்கங்களில் இந்த விவாதம் நேரடியாக ஒளிபரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக Paffaral அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்தார்.