இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் பிரதான தலைப்பாக தற்போது கட்சித்தாவல் மாறியுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியில் அரசியல் செய்து பின்னர் பிரிந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சமர் அரசியல் நிகழ்ச்சியின் விவாதம் இறுதியில் கைகலப்பாக மாறியது.
எம்.வேலு குமார் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் முற்போற்கு கூட்டணியாக ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகினர்.
எனினும், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலு குமார் தீர்மானித்தார்.
நியூஸ்ஃபெஸ்ட் சமர் நிகழ்ச்சியில் இவர்கள் இருவருக்கிடையில் இடம்பெற்ற கட்சித்தாவல் தொடர்பிலான கருத்து மோதல் இறுதியில் கைகலப்பாக மாறியது.
திகாம்பரம் வேலு குமார பார் குமார் என்று கூற வேலு குமார் திகாம்பரத்தை குடு திகா என்று கூறினார். இதன் பின்னரே திகாம்பரம் எழுந்து வேலுகுமாரை தாக்கினார்.