web log free
December 05, 2025

இன்னும் மூன்று நாட்களில் தேர்தல்!

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள் நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் எனும் கேள்விக்கான பதிலை அறிய இன்னும் மூன்று நாட்களே எஞ்சி உள்ள நிலையில், தற்போதைய ஜனாதிபதி தேர்தல் களமானது இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் நாட்டினுடைய எதிர்காலத்தின் நிலையினை தீர்மானிக்கின்ற பெரும் பொறுப்பு நாட்டு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இம்முறை ஜனாதிபதி தேர்தல் களத்தில் 39 ஜனாதிபதி வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை வழங்கியிருந்தனர்.

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் சஜித் பிரேமதாசவும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அனுரகுமார திசநாயக்கவும் சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் நாமல் ராஜபக்சவும் ஐக்கிய தேசிய கூட்டணி சார்பில் சுயேட்சை வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவும் பிரதான வேட்பாளர்கள் என்ற வரிசையில் முக்கிய இடத்தை வகித்து வருகின்றனர்.

அதேவேளை தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பினரால் தமிழ் பொதுவேட்பாளராக பா.அரியநேந்திரன் போட்டியிடுகின்றார்.

இவ்வாறானதொரு நிலையில் கடந்த சில வாரங்களாக இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டங்கள் நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd