web log free
December 21, 2024

அரசியல் நியமனங்கள் அதிரடியாக இரத்து

இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டு தூதரக சேவைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் நியமனங்களையும் உடனடியாக இரத்து செய்து இலங்கைக்கு திரும்ப அழைக்க ஜனாதிபதி அனுர திஸாநாயக்க தீர்மானித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர்களின் உறவினர்கள், நண்பர்கள் உட்பட பலர் அரசியல் நியமனம் பெற்று அந்த நாடுகளுக்கு சென்றுள்ளனர்.

அவர்களுக்கு இராஜதந்திர அறிவோ அனுபவமோ இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இவ்வாறான நியமனங்களால் வெளிநாட்டு தூதரகங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என வெளிநாட்டு சேவை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்படி அடுத்த சில நாட்களில் இந்த அரசியல் சார்புகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட நியமனங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டு அந்த நபர்கள் இலங்கைக்கு வரவழைக்கப்படவுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd