ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்திய பிரதமர் சார்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் இந்த அழைப்பை விடுத்திருந்தார்.
இதேவேளை, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
புதிய அரசாங்கம் தனது ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடனான வலுவான உறவைப் பேணுமென நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதுதவிர, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்துள்ளார். சமகி ஜன பலவேக தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.