யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பிரபலமான அஷேன் சேனாரத்ன நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பில் போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு தொழிலதிபராக, சமூக சேவைகள் தொடர்பான ஆக்கப்பூர்வமான வீடியோக்களை வழங்குவதன் மூலம் அஷேன் பலரிடையே பிரபலமடைந்துள்ளார்.


