web log free
December 22, 2024

ராஜபஷக்களின் டொலர் தேடி டுபாய் சென்ற கதை

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தை நிறுவிய பின்னர் ராஜபக்ஷக்களால் திருடப்பட்ட 1100 மில்லியன் டொலர்களை தேடுவதற்காக டுபாய் சென்ற போது அந்த பணம் வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

விசாரணைக் குழு செல்வதற்கு முன்னர் ரணில் விக்ரமசிங்கவும் ரவி கருணாநாயக்கவும் இந்த இரகசியத்தை பாராளுமன்றத்தில் அறிவித்தமையே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய வெர்ஜின் தீவுகளில் உள்ள ரெட் ரோஸ் நிறுவனத்தின் கணக்குகளில் பணத்தை தேடுவதற்காக அப்போதைய FCID இயக்குனர் ரவி வைத்தியலங்கார 22 மில்லியன் டொலர்களை பரிமாற்றம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் துபாய், சீஷெல்ஸ், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு பணம் கைமாறிய இடங்கள் மட்டுமன்றி கிரிஷ் ஒப்பந்தத்தில் பணம் வந்த இடங்கள் குறித்தும், வாங்கிய காணிக்கு எப்படி பணம் கிடைத்தது என்பது குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என வசந்தா தெரிவித்தார்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd