முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க, கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய ஜனநாயக குரல் என்ற புதிய அரசியல் கட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
மைக் சின்னத்தில் போட்டியிடும் அக்கட்சி, வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கட்டுப்பாடுடன் ஜனாதிபதி பொது மன்னிப்பு பெற்றுள்ள ரஞ்சன் தேர்தலில் போட்டியிட முடியாது.
அதனால் புதிய ஜனாதிபதியிடம் முழுமையான பொது மன்னிப்பு கோரி ரஞ்சன் விண்ணப்பித்துள்ளார்.
பொது மன்னிப்பு கிடைத்தால் அவர் தேர்தலில் போட்டியிடுவார்.