இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டி. எம்.டில்சான் இந்த வருட பொதுத் தேர்தலில் ரஞ்சன் ராமநாயக்கவினால் உருவாக்கப்பட்ட ஐக்கிய ஜனநாயகக் குரல் என்ற புதிய கட்சியில் இன்று (09) இணைந்தார்.
அதன்படி புதிய "ஐக்கிய ஜனநாயக குரல்" கட்சியின் தேசிய அமைப்பாளராக டி. எம். டில்ஷான் செயற்படுவதுடன், அக்கட்சியின் பொதுத் தேர்தல் வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷும் செயற்பட்டு வருகின்றார்.
திலகரத்ன டில்ஷான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் முகாமை பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், அவர் சமகி ஜனபலவேகய கட்சியின் களுத்துறை மாவட்ட அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து ஒரு மாதம் கழிவதற்குள், அவர் சஜித் பிரேமதாசவை விட்டு விலகி வேறு ஒரு கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியைப் பெற்றார்.
முன்னதாக ராஜபக்சவின் தீவிர ஆதரவாளராக இருந்த திலகரத்ன டில்ஷானும் 2019 ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக பணியாற்றினார்.
திலகரத்ன தில்ஷான் தற்போது அவுஸ்திரேலியாவின் குடியுரிமை பெற்றுள்ளார்.