web log free
October 18, 2024

இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பை இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி - தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினருக்கு இடையில் கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் சந்திப்பு இடம்பெற்றது.

குறுகிய நேரம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், அரசியல், புதிய அரசியல்யாப்பு உருவாக்கம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.