மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் இராணுவ நிலைமையை கருத்திற்கொண்டு, வெளிநாட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையின் பேரில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தில் அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளதுடன், இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்படும்.