தற்போதைய மலிமா அரசாங்கத்தின் ஆயுட்காலம் அதிகபட்சம் ஒன்றரை வருடங்கள் மட்டுமே எனவும் அதன் பின்னர் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் குழுவின் தலைமையில் அரசாங்கம் அமைக்கப்படுவது உறுதி எனவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார். எரிவாயு சிலிண்டர்.
கடந்த காலங்களில் சிலர் கேட்டதற்கும், பார்த்ததற்கும் மேலாக எதிர் கட்சிகளின் கதைகளை நம்பியதாகவும், ஆனால் எதிர்காலத்தில் அது தவறு என்பதை உணர்ந்து கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் கீழ் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.