இந்நாட்டின் கலாசாரத்தை மாற்றுவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எந்த உரிமையும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மாற்றினால் மாற்ற முடியும் என தெரிவித்த அவர், ஜனாதிபதியால் இந்நாட்டு மக்களை திருத்த முடியாது எனவும் தெரிவித்தார்.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ஐந்து வருடங்கள் முடிவதற்குள் அரசாங்கத்தை கவிழ்த்து நாமல் ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாக்கப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.