நாடு முழுவதும் தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருவதால், நாட்டில் உப்பு உற்பத்தி தடைபட்டுள்ளதால் தேவைக்கு ஏற்றவாறு விநியோக தடை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புத்தளம், பாலாவியா மற்றும் அம்பாந்தோட்டை உப்பு அடுக்குகளில் உள்நாட்டில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தாண்டு, பல மாதங்களாக அப்பகுதிகளில் மழை பெய்து வருவதால், உப்பு உற்பத்திக்கு தேவையான சூரிய வெளிச்சம் கிடைக்காமல் தடைபட்டது.
இதனால், எதிர்பார்த்த உப்பு உற்பத்தி கிடைக்கவில்லை.
சீரற்ற காலநிலை தொடருமானால் போதியளவு உப்பை சந்தைக்கு வெளியிட முடியாது என பாலாவியா உப்பு நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரணசிங்க பண்டார தெரிவித்துள்ளார்.
இந்நாட்டின் வருடாந்த உப்பின் நுகர்வு 125,000 முதல் 150,000 மெற்றிக் தொன் வரை உள்ளது, இதில் பெரும்பாலானவை புத்தளம் பாலாவியாவிற்கு அருகில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் மற்றும் ஏப்ரல் தொடக்கத்தில் மட்டுமே எதிர்பார்த்த உப்பு உற்பத்தி செய்ய முடியும். மே மாதம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பத்தாயிரம் மெற்றிக் தொன் உப்பு நாசமாகியுள்ளதாக பாலாவியா உப்பு நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரணசிங்க பண்டார தெரிவித்துள்ளார்.