web log free
February 05, 2026

எரிபொருள் குறித்து முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை

புதுப்பிக்கப்பட்ட இஸ்ரேல்-ஈரான் மோதலால் இலங்கைக்கு எண்ணெய் பெறுவதில் நெருக்கடி ஏற்படக்கூடும் என முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கப்பல் வழித்தடங்களை மாற்றி, பணம் கொடுத்தாலும் உரிய நேரத்தில் எண்ணெய் கிடைக்காமல், கப்பல் எண்ணெய் ஆர்டர்களை ஏற்காமல், விலையை உயர்த்தும் அபாயம் ஏற்படலாம் என முன்னாள் அமைச்சர் எச்சரித்தார்.

எனவே இந்த நிலைமையை முன்கூட்டியே கையாள்வதற்கு திட்டமிட வேண்டும் எனவும் அவ்வாறு செயற்பட்டால் நாட்டுக்கு தேவையான எரிபொருளை சிறிது காலத்துக்கு பிரச்சினையின்றி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு செய்யாவிட்டால் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அரசாங்கமும் மக்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாக நேரிடும் என காஞ்சன விஜேசேகர எச்சரிக்கிறார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd