அரச ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ள பணத்தின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் இதற்கு பணம் ஒதுக்கிய போதிலும் அதற்கான பணம் ஒதுக்கப்படவில்லை எனவும், மூலதன பொருட்களில் உள்ள பணம் போதுமானதாக இல்லை எனவும் அமைச்சர் விஜித ஹேரத் மேலும் வலியுறுத்துகின்றார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தமது அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதில்லை என்று கூறிய அமைச்சர், அரச ஊழியர்களின் சம்பளம் 2025 ஆம் ஆண்டு முதல் அதிகரிக்கப்படும் என்றும், ஆனால் அது எவ்வளவு என்று கூற முடியாது என்றும் கூறினார்.