பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மதுபானக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
15 ஆம் திகதி இல் போயா தினமும் இதற்கு ஒரு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் மதுக்கடைகள் மூடப்படவுள்ள தினங்களில் அனுமதி விதிகளை மீறி சட்டவிரோதமாக இயங்கும் மதுபானசாலைகளுக்கு சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு கலால் ஆணையாளர் நாயகம் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கலால் வரி நிலுவையை செலுத்த நிறுவனங்களுக்கு இம்மாதம் 30ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 ஆக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிறுவனங்களில் 4 நிறுவனங்கள் மீது கலால் திணைக்களம் உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாகவும், அந்த நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும் திணைக்கள உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.