2024 பொதுத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய தேசிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் 159 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
அதற்கமைய பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை விடவும் கூடுதலான அதிகாரம் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ளது.
21 தேர்தல் மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்திக்கு 141 ஆசனங்கள் கிடைத்தன.
தேசிய மக்கள் சக்திக்கு 6,863,186 வாக்குகள் கிடைத்ததுடன் இது 61.56 வீதமாகும்.
தேசியப் பட்டியலில் கிடைத்துள்ள 18 ஆசனங்கள் அடங்களாக தேசிய மக்கள் சக்திக்கு 159 ஆசனங்கள் கிடைத்துள்ளன.
இரண்டாவது இடத்தை பிடித்துள்ள ஐக்கிய மக்கள் சக்திக்கு 40 ஆசனங்கள் மாத்திரமே கிடைத்தன.
ஐக்கிய மக்கள் சக்தி 1,968,716 வாக்குகளை பெற்றதுடன் இது 17.66 வீதமாகும்.
257,813 வாக்குகளை பெற்றுக்கொண்ட இலங்கை தமிழரசுக் கட்சி 8 ஆசனங்களை கைப்பற்றியது.
புதிய ஜனநாயக முன்னணி 500,835 வாக்குகளை பெற்றுக் கொண்டது.
அதன்படி புதிய ஜனநாயக முன்னணிக்கு 5 ஆசனங்களையே கைப்பற்ற முடிந்தது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 350,429 வாக்குகளுடன் 3 ஆசனங்களை கைப்பற்றியது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 87,038 வாக்குளை பெற்று 3 ஆசனங்களை தனதாக்கியது.
அத்துடன் சர்வஜன அதிகாரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், யாழ்ப்பாணம் சுயேட்சைக் குழு இலக்கம் 17, இலங்கை தொழிலாளர் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளன.