இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை 225, இதில் 196 எம்.பி.க்கள் மக்கள் வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
ஒவ்வொரு கட்சியும் சுயேச்சைக் குழுவும் பெறும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அவர்கள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
அதன்படி, அண்மைய (14) தேர்தலில் ஒவ்வொரு கட்சி மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது அறிவித்துள்ளது.
அதன்படி, ஒவ்வொரு கட்சியும் பெற்றுள்ள தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளின் எண்ணிக்கை கீழே,
தேசிய மக்கள் சக்தி - 18
ஐக்கிய மக்கள் கூட்டணி- 5
இலங்கை தமிழ் அரசு கட்சி- 1
புதிய ஜனநாயக முன்னணி - 2
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 1
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1
சர்வஜன அதிகாரம்- 1
இதேவேளை, 10ஆவது பாராளுமன்றத்தில் தேசியப்பட்டியல் எம்.பி.க்களின் பதவிகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கலந்துரையாடல் தொடர்வதாக அதன் செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நாமல் ராஜபக்சவின் பெயர் முன்மொழியப்பட உள்ளது.
இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
எஞ்சிய கட்சிகள் இன்னும் நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டிய தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பட்டியலைத் தயாரிக்கவில்லை.