தென்கிழக்கு வங்கக் கடலில் நவம்பர் 23-ஆம் திகதிக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என்றும், அதன் பிறகு அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு தொடர்ந்து வளர்ச்சியடைந்து தீவின் கிழக்கு கடற்கரைக்கு நெருக்கமாக நகரும் என்று நம்பப்படுகிறது.
இதன்படி, இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால கணிப்புகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோருகிறது.
மேலும், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.