நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக லங்கா சதொச நிறுவனமும் அரிசியை விற்பனை செய்ய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி சதொச நிறுவனம் ஒரு வாடிக்கையாளருக்கு பத்து கிலோ நாட்டு அரிசி மற்றும் பச்சை அரிசியை மாத்திரமே வழங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், ஒரு பெரிய பல்பொருள் அங்காடி சங்கிலியில், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒவ்வொரு வகை அரிசி மூன்று கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது.
எவ்வாறாயினும், தற்போது நிலவும் அரிசி தட்டுப்பாட்டைப் போக்க அரசாங்கம் அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.