வீடுகளில் தங்கியுள்ள எம்.பி.க்கள் 21 ஆம் திகதிக்கு முன்னர் தமது குடியிருப்பை காலி செய்யாவிட்டால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் துண்டிக்கப்படும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், சுமார் 80 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாதிவெல பாராளுமன்ற உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியிலிருந்து 20 க்குள் வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
09வது பாராளுமன்றத்தின் முன்னாள் எம்.பி.க்கள் மாதிவெல எம்.பி உத்தியோகபூர்வ வீடமைப்புத் தொகுதியின் வீடுகளில் பொதுத் தேர்தல் நடைபெறும் கடந்த (14) வரை மாத்திரம் தங்க அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வருட பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் எம்.பி.க்கள் மாத்திரமே இந்த வீட்டுத் தொகுதியில் தங்கக்கூடிய தகுதியுடையவர்கள் என நாடாளுமன்ற அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
புதிய எம்பிக்களுக்கு உத்தியோகபூர்வ குடியிருப்பு வளாக வீடுகள் வழங்க இந்த நாட்களில் சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன.
அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த வீடுகள் வழங்கப்படவுள்ளதாக பாராளுமன்ற சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.