இன்று (25) முதல் 3 நாட்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு நடைபெறவுள்ளது.
குறித்த செயலமர்வு காலை 9.30 முதல் மாலை 4.30 வரை நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
இந்த செயலமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வகிபாகம், பாராளுமன்ற சிறப்புரிமைகள், பாராளுமன்றத்தின் சட்டவாக்க செயற்பாடுகள், பாராளுமன்ற குழு முறைமை, பாராளுமன்ற நிலையியல் கட்டளைகள், அரசியலமைப்பின் ஏற்பாடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளன.