சஜித் பிரேமதாசவுக்கு தலைமைத்துவத்தை வழங்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருந்தால் மீண்டும் சிறிகொத்தவிற்கு வருவதற்கு தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
“மிஸ்டர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையில் இல்லை, அவர் வந்ததும் விவாதிப்பார் என்று நம்புகிறோம். ரணில் விக்கிரமசிங்க உட்பட இந்த வலதுசாரி அரசியல் குழுக்கள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.
ரணில் விக்கிரமசிங்க அவர்களும் ஐ.தே.க.வின் அனைத்து உறுப்பினர்களும் இக்கட்சியுடன் ஒன்றிணைந்து இந்தப் பிரிவினையை இல்லாதொழித்து எதிர்காலத்தில் ஒரே வேலைத்திட்டத்தை செயற்ப்படுத்த முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம். ஐக்கியமக்கள்சக்தி மற்றும் ஐ.தே.க அணிகள் எதிர்காலத்தில் ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்.