நாட்டை பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேற்படி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) உதய ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக தீவின் 18 மாவட்டங்களில் உள்ள 141 பிரதேச செயலகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 66,947 குடும்பங்களைச் சேர்ந்த 230,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 8 வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.