மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைவாக பாராளுமன்றம் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால் தெரிவித்துள்ளார்.
புதிய சபாநாயகர் அசோக ரன்வலவிடம் கர்தினால் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் கொழும்பில் உள்ள பேராயர் இல்லத்திற்கு அவரைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்த போதே சபாநாயகர் இதனைத் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைப் பணிகளை கர்தினால் பாராட்டியதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.