web log free
September 16, 2024

அமைச்சரவைக்கூட்டம் இன்று இல்லை?

வராந்தம் நடைபெறும் அமைச்சரவைக்கூட்டம் இன்று நடைபெறமாட்டாது என தகவல் வெளியாகியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழு தொடர்ந்து இதே விதத்தில் செயற்பட்டால் தான் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என, ஜனாதிபதி கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இதன் காரணமாகவா அல்லது வேறு காரணங்களுக்காகவா இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறவில்லை என தெளிவாகவில்லை.

எனினும், நேற்று மாலை வரை இன்று அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

Last modified on Tuesday, 11 June 2019 05:15