web log free
April 03, 2025

'20 கைகள் யானையை தூக்கும்'


பட்ஜெட்டின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 20 பேர், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்து, பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களிப்பனர் என சுற்றாடல்துறை பிரதியமைச்சர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார்.


ஐ.தே.கவின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று (06) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


தற்போதைய அரசியல் நெருக்கடியில் ஐக்கிய தேசியக் கட்சியின் வகிபாகத்தை சகலரும் விளங்கிக்கொண்டுள்ளனர் என்றும் அவர், இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். ஆகையால், அது பட்ஜெட்டை, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 20 பேரின் ஆதரவுடன் நிறைவேற்றுவோம் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Last modified on Sunday, 06 January 2019 23:16
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd